தேசிய வாசிப்பு மாதம் வருடா வருடம் ஒக்டோபர் மாதம் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இவ்வருடத்திற்கான வாசிப்பு மாத கருப்பொருளாக ” உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே!” என அறிவிக்கபட்டுள்ளது.
இவ்வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் வகைியில் கிண்ணியா மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் விழிப்புனர்வு வீதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வை கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் சட்டத்தரனி நஜாத் அவர்களுடன் சேர்ந்து கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம் அவர்களும் ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது பாடசாலையின் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் வாசிப்பின் முக்கியத்துவங்கள் தொடர்பில் பதாதைகளை ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
ஊர்வலம் கிண்ணியா மத்திய கல்லூரியின் நுழைவாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கிண்ணியா பொது நூலகம் வரை சென்று மீண்டும் பாடசாலையில் முடிவுற்றது.