சர்வதேச உதவி மாநாட்டை நடத்தி இலங்கையின் வடக்கு கிழக்கை தனது எதிர்கால அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வறுமையை ஒழிக்க புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். சமுர்த்தி, அஸ்வெசும போன்ற வேலைத்திட்டங்களில் இருந்த நல்ல விடயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வறுமையை ஒழிக்க புதிய வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளோம். இந்த நாட்டில் உள்ள ஏழைகள் மானியம் பெறும் பயனாளிகளாக வாழ விரும்பவில்லை. அவர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு இரண்டு வருடங்களில் இந்த நாட்டில் வறுமையை ஒழிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். அதன் கீழ் ஒரு குடும்பத்துக்கு தலா இருபதாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளோம்.’