கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிண்ணியா மத்திய கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இரசாயனவியல் செயல்முறை விளங்கங்களுடனான கண்காட்சி இடம்பெற்றது.
உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களின் பரீட்சையின் பெறுபேறுகளை முன்னேற்றும் வகையில் இச் செயல்முறை இரசாயனவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியினையும், விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழவினை கிண்ணியா வலயக் கல்வி அலுவலக விஞ்ஞானப்பிரிவு செயல்முறை இணைப்பாளர் ஒழுங்குபடுத்தியிருந்தார்.
நிகழ்வை ஆரம்பிக்கும் முகமாக கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் வருகை தந்ததுடன், வலயக் கல்வி பிரதிப் பணிப்பாளர், கிண்ணியா மத்திய கல்லூரைி அதிபர், மற்றும் அதிகரிகளும் கலந்து கொண்டிருந்தனர்