YouTube!
இது ஒரு பணம் சம்பாதிக்கும் தளமாக இன்றைக்கு விளங்குகிறது. உலக வரை படத்தில் காண முடியாத கிராமவாசிகள் கூட இதன் மூலம் இன்றைக்கு மில்லியனர்களாக ஆகி விட்ட செய்திகளை காண முடிகிறது.
இந்த யூ டியூபை கண்டு பிடித்தவர் யார்?
வங்க தேச வம்சா வழியில் வந்த ஜாவித் கரீம்.
பே பால் என்கிற நிறுவனத்தின் பணியாற்றிக் கொண்டிருந்த ஜாவித் கரீம் என்கிற இளைஞனின் மூளையில் உதித்த சிந்தனை தான் யூ டியூப். இவர் தன்னுடன் பணியாற்றிய சக நண்பர்கள் இருவரை இணைத்து கொண்டு உருவாக்கிய தளம் தான் யூ-டியூப்.
உலகத்தின் முதல் யூ டியூப் வீடியோ எதுவெனில், ஜாவித் கரீம் பதிவேற்றிய Me at the zoo (நான் அந்த மிருக காட்சி சாலையில்) என்பது தான். யூ டியூபின் முதல் சானலும் Javed என்கிற இவருடைய சானல் தான்.
\வங்க தேசத்தை சார்ந்த நயீமுல் கரீம் என்கிற, உலகின் பிரபலமான 3M நிறுவனத்தில் ஆராய்ச்சியாளாராக பணியாற்றிய தந்தைக்கும், செர்மானிய தாயிற்கும் பிறந்தவர் தான் ஜாவித் கரீம்.
இன்று, சில விடயங்களை படித்து கொண்டிருந்த பொழுது கிடைத்த ஒற்றை செய்தியும் பின்னர் அது பற்றிய தேடலின் பொழுதும் கிடைத்த தகவல்கள் தான் இவை.