(நீர்கொழும்பு நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்)
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2350 கிலோ பீடி இலைகளை ஏற்றிய லாரியை நீர்கொழும்பு , குட்டிதூவ சிறைச்சாலைக்குப் பின்னால் உள்ள கடற்கரை அருகில், நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை பிரிவினர் சந்தேக நபர் ஒருவருடன் நேற்று (8) கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு , கடோல்கலே , தலாதுவ பிரதேசத்தில் வசிக்கும் அலென்சு குட்டிகே சிங்க தீப்த சனீ பெர்னாண்டோ என்ற கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவின் வழிகாட்டலில், பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.