எம்.ஆர். சியாஉர் ரஹ்மான்
(பறகஹதெனிய)
குவைட் நாட்டில் தொழில் நிமிர்த்தம் அங்கு பணிபுரிகின்ற குருநாகல், பறகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர்களின் முன்னெடுப்பில் இயங்கிவரும் குவைட் பறகஹதெனிய சங்கத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வொன்று கடந்த 07 வெள்ளி அன்று இடம்பெற்றதாக அங்கு பணிபுரியும் எம்.ஆர்.எம். ரஸான் தெரிவித்தார்.

மேலும் குவைட் பறகஹதெனிய சங்கமானது குறித்த பிரதேசத்தை உள்ளடக்கிய பல்வேறு சமூக நலன் சார்ந்த பொதுநலப்பணிகளை முடியுமான வகையில் மேற்கொள்ளும் நோக்கில் நிறுவப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு கடந்த காலங்களில் மருத்துவ உதவிகள், அசாதாரண சூழ்நிலைகளின் போது உலர் உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுத்தல் போன்ற பணிகளை முன்னெடுத்துள்ளது.
எதிர்வரக்கூடிய நாட்களிலும் இயலுமான வகையில் பறகஹதெனிய பிரதேசத்தின் நலன்சார் விடயங்களில் தமது ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
