திருகோணமலையில் ஊடகம் சார்ந்தவர்களுக்கு விருது!

திருகோணமலை மீடியா போரத்தின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு கிண்ணிய பொது நூலகம் மண்டபத்தில் இடம் பெற்றது.

திருமலை மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக விருது – 2024 வழங்கும் நிகழ்வு இவ்வாறு இடம் பெற்றது.

போரத்தின் தலைவர் எச்.எம்.ஹலால்தீன் தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, இனிய நகர சபை செயலாளர் எம் கே எம் அனீஸ், எம் வி எம் பவுண்டேஷன் உரிமையாளர் எம் வி எம் பௌமி, பாதுகாப்பு அமைச்சின் பிரதி கட்டுப்பாட்டாளர் எம் எஸ் எம் இக்ரீமா மீடியா போரத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இதன்போது, கடந்த பல வருடங்களாக ஊடகத்துறைக்கு பெரும் பங்காற்றிய 43 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு ஊடக விருதும் வழங்கி வைக்கப் பட்டன.

இதில் ஊடக விருது, சமூக தாரகை விருது, போரத்திற்கு தொடர்ச்சியாக செய்திகளை வழங்கிய மற்றும் பிரதேசத்தில் நடக்கின்ற செய்திகளை உடனுக்குடன் வழங்கி வந்த மூன்று ஊடகவியலாளர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *