ஏ 35 பிரதான வீதியா புளியம்பொக்கனை பகுதியில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு. போலீசாரின் அதிரடி செயல்!

கிளிநொச்சிபோலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு பயணித்து  கொண்டிருந்த பொழுது  புளியம்பொக்கனை பகுதி  மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளில்  வந்த இருவர் வீதியால் பயணித்த பெண் அணிந்திருந்தமூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைவாக செயல்பட்ட தர்மபுர போலீசார் சந்தேக நபரை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பென்னிடம் அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் அவர்களின் உடமையில் இருந்து 2.25 m மில்லிகிராம் கெராயினும் 20 கிராம் கேரளா கஞ்சாவும் திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தடையப் பொருட்கள் மற்றும் சந்தேக நபரை இன்றைய தினம்28.03.2025 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தி உள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை தருமபுர போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும்   இரண்டு சந்தேக நபர்களையும் மீண்டும் தர்மபுரம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *