ஐக்கிய அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமொன்றுக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018ஆம் ஆண்டு 50 மில்லியன் ரூபாய்களை செலவளித்ததாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இச்சுற்றுப்பயணத்தில் முன்னாள் முதற்பெண்மணி, ஒன்பது அமைச்சர்கள் உள்ளடங்கலாக 77 பேரை சிறிசேன கூட்டிச் சென்றதாகக் அருண் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது 72 பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டிச் சென்ற நிலையில் 9.5 மில்லியன் ரூபாய்கள் செலவானதாகவும் அருண் மேலும் குறிப்பிட்டுள்ளார்.