திருகோணமலை கடலில் மீட்க்கப்பட்ட Drone யாருடையது? தகவல் வெளியானது.

திருகோணமலை அருகே கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றை மீனவ குழுவொன்று மீட்டுள்ளது.

இது நிலத்திலிருந்து 35 கடல் மைல் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கிகனகேவிடம் வினவிய போது, ​​இது இலக்கு ஆளில்லா விமானம் என தெரிவித்தார்.

இந்த வகை விமானம் இதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டிலேயும் மீட்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சுமார் 40 கிலோ எடையுள்ள இதுபோன்ற விமானங்கள் இந்திய விமானப்படையின் பயிற்சி அமர்வுகளில் இலக்குகளாகப் பயன்படுத்தப்படுவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இம்முறை மீட்கப்பட்டுள்ள விமானம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும் கருத்து தெரிவித்த விமானப்படை பேச்சாளர், விமானம் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *