கிளிநொச்சி கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
நெற்பயிர்கள் 70 நாட்கள் கடந்த நிலையில் இரவு வேலைகளில் தொடர்ச்சியாக 5, 6 காட்டு யானைகள் மாடுகள் மேய்வது போன்று நாசப்படுத்தி வருகின்றதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இந்தக் காலப்பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக இப்பகுதி விவசாயிகள் இரவு பகலாக நித்திரை இன்றி காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு யானைகளின் அட்டகாசத்தால் ஒவ்வொரு வருடமும் நெற்செய்கையில் பெரும்நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமது பகுதிக்கு வருகை தந்து விவசாயிகளின் நிலைகளை நேரடியாக பார்வையிட்டு எமக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்று தர வேண்டுமென இப்பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுவரும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.