ஏறாவூரில் ஏறாவூரில் அதிகாலை நேரம் ஹாட்வெயார் கடைக்குள் சொகுசு கார் நுழைந்து விபத்து சம்பவம் .
(உமர் அறபாத் -ஏறாவூர்)
ஏறாவூரில் இன்று(17/12/2024) அதிகாலை நேரம் ஹாட்வெயார் கடைக்குள் சொகுசு கார் நுழைந்து விபத்து சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
பண்டாரகமுவ இருந்து கல்முனை நோக்கி பயணித்தே காரே தூக்க களைப்பினால் கட்டுப்பாட்டை இழந்து ஹாட்வெயார் கடைக்குள் புகுந்துள்ளது.
உயிர் சேதம் மற்றும் படுகாயம் எதுவும் இடம்பெறவில்லை.
எனினும் கடைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமும் கடையின் முன்பகுதியும் சேதமாகியுள்ளது.
விபத்து பற்றிய
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் .