கிண்ணியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிண்ணியா பொலிஸ் பிரிக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் இன்றிரவு (20) மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கிண்ணியா, மஹரூப் நகர், 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முஹம்மது லெப்பை முபாரக் (60 வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டவராவார்.

இன்று(20) மாலை 5.00 மணிக்கு கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு, வந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரிய வந்திருப்பதாகவும், இரவு 7 மணி அளவில் சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் கிண்ணிய வைத்திய சாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *