திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை மரவாடி மக்களின் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (16) வரசக்தி விநாயகர் கோயில் முன்றலில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் யானை பிரச்சனை, யானை வேலி, சட்டவிரோத மணல் அகழ்வு இந்து மயான குறைபாடு போன்ற பிரச்சனைகள் கலந்தாலோசிக்கப்பட்டது. குறித்த பகுதி மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரிடத்தில் முன்வைத்தனர். மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விடயங்களை ஆராய்ந்து தீர்ப்பதற்கான நவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்களிடத்தில் உறுதியளித்தார்.