கிண்ணியா பிரதேச ஜனநாயக பங்குதாரர்களுக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பான பயிற்சி செயலமர்வு நேற்று (20) கிண்ணியா பிரதேச சபை புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
AHRC நிறுவனத்தின் ஜனநாயகப் பங்குதாரர்களுக்கான அரங்கம் எனும் செயற்திட்டத்தின் கீழ் பங்குதாரர்களின் ஆளுமை திறன் விருத்திக்கான செயற்பாடுகளில் ஓர் அங்கமாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பான தெளிவினை ஏற்படுத்தும் முகமாக இப் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சி அகம் மனிதாபிமான வளநிலையத்தின் (AHRC) ஜனநாயக பங்குதாரர் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்ட இணைப்பாளர் என். இஸ்மியா மற்றும் நிறுவனத்தின் உதவிக் கணக்காளர் செல்வி. கு. சஞ்சலிதா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபையின் செயலாளர் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள், உள்ளூர் ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என 30 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.