நீதிமன்றில் சரணடைந்துள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை குறித்த பதவியிலிருந்து பதவி நீக்குமாறும் அவருக்கு பிணை வழங்காமல் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் இன்று (20) முற்பகல் 11 மணியளவில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று நடைபெறுகிறது.
இதனை நீர்கொழும்பு போராட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததோடு தேசபந்துவை சிறையில் இடுமாறும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை சரியாக மேற்கொள்ளுமாறு குரல் எழுப்பினர் .