கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பிரிவிலுள்ள கல்மடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான பயிர்ச்செய்கைக்கூட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த கலந்துரையாடலில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர், பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கமநல காப்புறுதிச்சபை உதவிப்பணிப்பாளர், கிழக்கு பிரிவுக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய திணைக்கள பிரதிப்பணிப்பாளர், கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள்,விவசாய திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.2025ம் ஆண்டு கல்மடுக்குளத்தின் கீழ் 2126 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும் 150ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானிய செய்கையும் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.
