ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
மாளிகைக்காடு செய்த் பின் தாபித் பள்ளிவாசலில் இன்று (19) ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் இப்பள்ளிவாசலின் மேல் தளத்திற்கான வேலைத்திட்டங்களை பூரணப் படுத்தும் விடயங்கள் மேற்பார்வை செய்யப்பட்டதுடன் இதற்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கெளரவ ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் நிருவாகத்தினர் கையளித்தனர்.
இந்நிகழ்வில் உலமாக்கள், மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினர்,ஊர் முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள், ரஹ்மத் பவுண்டேசன் முக்கியஸ்தர்கள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.