சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 11ம் ஆண்டு நிறைவு விழா !

juhgasgdywsdcd

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்கிய சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றம் தன்னுடைய 11ம் ஆண்டு நிறைவு விழாவை கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ் மௌலானாவின் நெறிப்படுத்தலில் மன்றத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், அதிபருமான யூ.எல். நஸாரின் தலைமையில் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய “கலைச்சுடர் சக்காப் மௌலானா” அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை கொண்டாடியது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கலைஞர்களை சான்றிதழ்கள், விருதுகள், நினைவு சின்னங்கள் வழங்கி பாராட்டி கௌரவித்தார். மேலும் இந்நிகழ்வில் பல்வேறு  அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டி.எம்.எம்.றிம்ஸான், கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான், சாய்ந்தமருது பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்களான மௌலவி ஏ. தௌபீக், ஏ.எச்.சபிக்கா, ஓய்வு பெற்ற கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்ரப், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா, அமானா நற்பணி மன்ற தலைவர் ஏ.எல்.ஏ. பரீட், சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.சி.என். ரிப்கா அன்ஸார், மருதமுனை புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல். அன்சார் உட்பட பாடசாலைகளின் ஆசிரியர்கள், பிரதேச கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், மன்றத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்லின சமூகங்களின் கலை, இலக்கிய நிகழ்வுகளும் பிரதேச சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் கௌரவிப்புக்களும் நடைபெற்றது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *