நூருல் ஹுதா உமர்
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட பெண்கள் அமைப்பு என்பவற்றின் அனுசரணையுடன் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பால்நிலைசார் வன்முறைகெதிரான செயலணிக் கூட்டம், போதைப் பொருள் முன்தடுப்பு கூட்டம் போன்றன காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காரைதீவு பொலிஸார், சிறுவர் மகளிர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.