கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவினில் வேள்ட் விஷன் அமைப்பினரினால் உள்ளூர் முயற்சியாளர்களை வலுவூட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன் கல்குடாவில் (28) நேற்று இடம் பெற்றது.
மாவட்டத்தில் வேள்ட் விஷன் அமைப்பினர் உள்ளூர் முயற்சியாளர்களை வலுவூட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்து செயற்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒர் அங்கமாக பாசிக்குடா கடற்கரைக்கு அண்மித்த பிரதேசத்தில் பனைசார் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான தற்காலிக கூடாரம் அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் பிரதேச மக்களின் குடிசைக்கைத் தொழிலில் ஒன்றான பனை சார் உற்பத்தி பொருட்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கு தற்காலிக கூடாரம் ஒன்றை அமைத்து வழங்குமாறு முன்வைக்கட்ட கொளிக்கைக்கு அமைவாக வேள்ட் விஷன் நிறுவனத்தினர் இதனை வழக்கியுள்ளனர்.
35 க்கு மேற்பட்ட உள்ளூர் பெண் முயற்சியாளர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினர், மாற்றுதிறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றது.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம், வேள்ட் விஷன் உத்தியோகத்தர்கள் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.