சாய்ந்தமருதில் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகிக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் உணவகங்களில் இறுக்கமான சுகாதார பரிசோதனை !

refdrfrf

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகம் செய்யும் பள்ளிவாசல்கள் முதலானவை இன்று (04) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஜே.எம். நிஸ்தார், ஏ.எல்.எம். அஸ்லம், ஏ. வாசித் அஹமட் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது உணவகங்களில் மனித நுகர்வுக்கு  பொருத்தமற்ற முறையில் உணவைக் கையாண்ட  இரண்டு உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன்  மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு  அவ் உணவுப் பண்டங்கள் உணவக உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் உணவு கையாளும் நிறுவனங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக அறிவிப்பதற்கு QR ஸ்டிக்கரும் உணவகங்களில் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *