நூருல் ஹுதா உமர்.
கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி 13 வருடங்களின் பின்னர் கடந்த 26.04.2025 அன்று யூ.கே முஹம்மது நஜீப் மற்றும் எம்.எஸ்.எம். அசீம் ஆசிரியர்களின் நெறியாள்கையில் பாடசாலை அதிபர் ஏ.எல். ரஜப்டீன் தலைமையில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், பிரதி கல்வி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. வி. சாந்தரூபன், கோட்டக்கல்வி பணிப்பாளரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ. சன்ஜீவன், உடற்கல்விக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எல். எம். முதர்ரீஸ், ஆசிரிய ஆலோசகர் ஏ.எம். அன்சார், இப்பாடசாலையின் ஓய்வு நிலை முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம்.சைபுதீன், அதிபர் வி.எம். ஸம்ஸம், எச்.எம்.எம். அனீஸ் மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்தி குழு சங்க செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை முன்றிலில் இல்ல விளையாட்டுப் போட்டியின் நினைவாக பிரதம அதிதியின் கரங்களால் மரம் ஒன்று நடப்பட்டது. சிறப்பாக நான்கு தினங்களாக இடம்பெற்ற இப் போட்டியில் 386 புள்ளிகளை பெற்று சபா இல்லம் முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.
போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கான வெற்றி கிண்ணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் மூன்றாம், இரண்டாம் இடங்களை பெற்றுக்கொண்ட இல்லங்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் கௌரவ அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டு இறுதியாக 2025 ஆம் ஆண்டு அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் முதலாம் இடத்தை பெற்ற சபா இல்லத்துக்கான வெற்றி கிண்ணம் பிரதம அதிதி எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களின் கரங்களால் வழங்கி வைக்கப்பட்டது.