(நீர்கொழும்பு நிருபர் எம். இஸட். ஷாஜஹான்)
பிரபல சிங்கள நடிகரும் அரசியல் தலைவருமான காலஞ்சென்ற விஜயகுமாரனதுங்கவின் 37 ஆவது சிரார்த்த தினம் இன்று காலை சீதுவையில் அமைந்துள்ள விஜயகுமாரனதுங்க சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விஜயகுமாரனதுங்கவின் மனைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரனதுங்க கலந்து கொண்டார்.
முன்னாள் அமைச்சர் ஜீவன்குமார துங்க, ரஞ்சன் ராமநாயக்க , முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, விஜயகுமாரதுங்கவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சமய நிகழ்வைத் தொடர்ந்து விஜயகுமார தூங்கவின் சமாதிக்கு சந்திரிகா குமாரதுங்க மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முக்கியஸ்தர்கள் மற்றும் ஏனையவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.