AHRC நிறுவனத்தின் ஒரு அமைப்பில் ஜனநாயக தங்குதாரர்கள் குழுவினை உருவாக்கி பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்கின்றது.
குறித்த திட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக பங்குதாரர் குழு அமைக்கப்பட்டிருந்தது. அக்குளுவில் மூன்றாவது கூட்டத்துடன் வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
கடந்த காலங்களில் முன்முடியப்பட்ட திட்டங்களும் இதன் போது கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் AHRC நிறுவனத்தின் திருமணமலை மாவட்ட திட்ட இணைப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட திட்டங்களைப்பாளர், கிண்ணியா பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சபைக்கு உட்பட்ட இக்குழுவின் உறுப்பினர்களான தெரிவு செய்யப்பட்ட பொதுமக்கள் இளைஞர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.