மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்காவின் பணிப்பாளரும் வை.எம்.எம்.ஏ. மாவடிப்பள்ளி கிளையின் தலைவருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் அமைப்பின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஐ.எல்.எம். இர்பான், தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியின் 17வது படைப்பிரிவின் பயிற்சி அதிகாரி கேப்டன் எம்.டி. நௌஷாட், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ.எம். றியாஸ், ஆசிரியர் மேஜர் கே.எம். தமீம், ஆசிரியர் கேப்டன் எம்.ஷிப்லி, கல்முனை பிரதேச செயலக மூர்த்தி முகாமையாளர் எஸ்.எல். அஸீஸ், சாய்ந்தமருது இளைஞர் சேவை பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ.எம். ஹாரூன், அம்பாறை மாவட்ட வை.எம்.எம்.ஏ. கிளைகளின் தலைவர்கள், அக்கரைப்பற்று – கல்முனை சாரணிய பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.