கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான காரணம் வௌியானது.

egfrg

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கொலையைச் செய்த துப்பாக்கிதாரி அதே நாளில் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டார்.

அவர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வேனின் சாரதியும் இதன்போது கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த வேன் போலி இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, ​​துப்பாக்கிதாரி, தானும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணும் கடந்த 17 ஆம் திகதி கடுவெலவில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

அங்கு, ​​காரில் வந்த ஒருவர், துப்பாக்கிதாரிக்கும், குறித்த பெண்ணுக்கும் பொதி ஒன்றை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

துப்பாக்கிதாரி அணிந்திருந்த சட்டத்தரணி உடை உட்பட பல பொருட்கள் பொதியில் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த அன்று காலையில் பொதியை கொடுத்த நபரால், துப்பாக்கிதாரியும் குறித்த பெண்ணும் ஹொண்டா ஃபிட்டில் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன்படி, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் துப்பாக்கிதாரிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தைக் கைப்பற்றினர்.

கொலைக்கு முன்னும் பின்னும் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொழும்பு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *