இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ் நகருக்கு அண்மித்த பகுதியில் மூன்று பேரூந்துகளில் குண்டுகள் வெடித்துள்ளன.
இன்னும் இரண்டு பேரூந்துகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இஸ்ரேலின் அனைத்து பேரூந்து, ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டு, வெடிமருந்து சோதனை நடத்தப்படுகின்றது.
குண்டுவெடிப்பினால் எவருக்கும் எதுவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே வெடிக்காத குண்டு ஒன்றில் “இது துல்கர்ரமின் பரிசு” என்று எழுதப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குண்டு வெடிப்புச் சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ள இஸ்ரேலிய அரசாங்கம், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான தேடுதல்களை ஆரம்பித்துள்ளது.
(யாருக்கும் காயங்கள் இல்லாத குண்டுவெடிப்பு எனும்போதே இது இஸ்ரேலிய உள்வீட்டு சதியாக இருக்கலாம். இவ்வாறான போலி குண்டுவெடிப்பு ஒன்றை நடத்தி, ஹமாஸ் மற்றும் அப்பாவி பலஸ்தீனர்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்குவதை நியாயப்படுத்திக் கொள்ளும் ஒரு உத்தியாகவும் இருக்கலாம். இலங்கையில் இஸ்ரேலிய ராணுவ ஆலோசகர்கள் நிலைகொண்டிருந்த காலத்தில் கொழும்பு கோட்டை உள்ளிட்ட இடங்களில் வெடிபொருட்கள் அற்ற, வெறும் சப்தம் மட்டும் கொண்ட குண்டுகளை வெடிக்க வைத்து, பொதுமக்களை அச்சுறுத்தி புலிகளுக்கு எதிரான கடுமையான மனோநிலை மற்றும் எவரையும் சந்தேகப்படும் நிலையை கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படுத்துவதில் இஸ்ரேலிய ஆலோசனை பிரதானமாக இருந்தது.)