நூருல் ஹுதா உமர்
பிரதேச மாணவர்களின் கல்வியில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக திகழும் சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய மாணவர்களின் நலன்கருதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 05 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வகுப்பறை கட்டிட அபிவிருத்தி பணிகளை இன்று கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் ஆராய்ந்தார்.
சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல். நஸார் தலைமையிலான பாடசாலை சமூகத்தை சந்தித்து பாடசாலை அபிவிருத்தி பணிகள், கல்வி மேம்பாட்டு விடயங்களை பற்றி கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது நிதியொதுக்கீட்டில் நடைபெறும் வேலைத்திட்டங்களை பார்வையிட்டதுடன் அடுத்தகட்ட பணிகளுக்கு தேவையான ஒழுங்குகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இதன்போது தனது 01 மில்லியன் ரூபாய் விசேட ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பட்மின்டன் அரங்கையும் பார்வையிட்ட அவர் மாணவர்களின் விளையாட்டுத் துறை, கல்விசாரா விடயங்களின் அடைவுகள் மேம்பாட்டு விடயங்கள் பற்றியும் ஆராய்ந்தார்.
உதவி அதிபர் எம். உவைஸ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், பாடசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த விஜயத்தின் போது தொடர்ச்சியாக இப்பாடசாலையின் வளர்ச்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினது பங்களிப்பு தொடர்பில் சிலாகித்த சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல். நஸார் அவர்கள் இப்பாடசாலையை தரம் 11 வரை தரமுயர்த்த பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிய ஒத்துழைப்புக்கும், தொடர்ச்சியான சேவைகளுக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்