தேசிய மக்கள் கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் களுதாவளை வட்டார வேட்பாளர் தேர்தல் அலுவலகம் இன்றைய தினம்( 25 ) வெளிவிவகார பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான அருண் ஹேமசந்திரா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வினால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள்,பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.