மட்டக்களப்பு .குருக்கள்மடம், செட்டிபாளையம் ,பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு.

சுத்தமான கடற்கரை

மட்டக்களப்பு .குருக்கள்மடம், செட்டிபாளையம் ,பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு.

சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினை நடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அம்சமாக “சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் நிகழ்ச்சித்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையை அன்மித்த பிரதேசங்களை சுத்தம் செய்யும் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் குருக்கள்மடம் , செட்டிபாளையம், பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(16.02.2025)இடம்பெற்றது.

சுற்றுலா பயணிகள் அதிகம் கூடுகின்ற கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்ற சுற்றாடலுக்கு பாதிக்கின்ற பொருட்களை அப்புறப்படுத்தி அழகுப்படுத்தும் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பிரதேச செயலக உயர் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், பாடசாலை மாணவர்கள், என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *