சமூகத்தில் அடையாளப்படுத்தப்படாத சாதனையளர்களை கொண்டாடுகின்ற பெறுமதிமிக்க BGIA சர்வதேச விருதுகள் உலகளவில் போற்றப்படுகின்றன. சமூகத் தொண்டாளர்கள், வளர்ந்து வளரும் தொழில் முனைவாளர்கள், கலாச்சார மற்றும் கலை துறையில் சாதனை படைத்தவர்கள் மற்றும் சுகாதார துறைகளில் இருந்து சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கும் இம்மகோட்சவம் சமீபத்தில் கொழும்பு BMICH இல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூகத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்திய சமூகத் தலைவர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக: இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஆஸ்டர் குழும மருத்துவமனைகளின் சர்வதேச உறவுகளின் பிராந்தியத் தலைவர் திரு. அர்பன் சட்டர்ஜி மற்றும் த ஹோப் மெடிக்கல் சர்விசஸ் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளரும் , ஆஸ்டர் குழும மருத்துவமனைகளின் இலங்கைக்கான பிராந்திய பிரதிநிதியுமான திரு. சியாஸ் ஷதுருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களின் பங்கு பற்றுதலானது விழா சர்வதேச அளவில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்டியதாக அமைந்திருந்தது.
திரு. வாமதேவ தியாகேந்திரன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது அத்துடன் வாமதேவ தியாகேந்திரன் அவர்களால்உடல் ஊனமுற்ற 25 குழந்தைகளுக்கு 10,000 ரூபாய் வாழ்வாதார ஊக்க உதவித் தொகையொன்றை வழங்கி வைத்தார்.