கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் செப்புக் கம்பிகள் போதைக்கும்பல் மூலம் திருட்டு – சீர் செய்ய 900 மில்லியன் ரூபாதேவை
கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் மின்சார கட்டமைப்பில் உள்ள செப்புக் கம்பிகள் தொடர்ந்தும் திருடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொவிட் காலத்தில் இருந்து இவ்வாறு செப்புக் கம்பிகள் திருடப்படுவதாக கூறுகின்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை போதைக்கு அடிமையான கும்பல்கள் சேர்ந்தே இந்த விடயத்தை மேற்கொள்வதகாகவும் தெரிவித்துள்ளது.
இரவு வேலைகளில் ட்ராஸ்போமர்களை சேதப்படுத்தி மின்சாரத்தை துண்டித்து இவாறு செப்புக் கம்பிகளை கொள்ளையிடுகின்றனர். இவற்றை சீர் செய்ய சுமார் 900 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து நெடுஞ்சாலையை பாதுகாக்க விஷேட அதிரடிப்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.