December 21, 2024
Home » News » மியன்மார் அகதிகளை சந்தித்து அடிப்படை வசதிகளை வழங்கிய றிஷாத்.
470585463_1129233149202961_4562812545305217651_n

மியன்மாரில் இருந்து இலங்கை வந்த அகதிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்,முன்னாள் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் ஹில்மி மஹ்ரூப்,உயர்மட்ட உறுப்பினர் ஹில்மி முகைதீன் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டனர்!

மியன்மாரில் இருந்து அகதிகளாக இலங்கையை வந்தடைந்த 115 அகதிகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கௌரவ றிஷாத் பதியுத்தீன் அவர்கள் கடமை உணர்வோடு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Mohamed Aliyar Mohamed Thahir முன்னாள் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் Hilmy Maharoof, கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் ஹில்மி முகைதீன் சகிதம் நேரில் சென்று சந்தித்து தேவையான உதவிகளையும் வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

அனாதரவற்று கரையொதுங்கிய இந்த மக்கள் திருகோணமலை ஜமாலியா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அவர்கள் தூங்குவதற்கு பாய் தலையணை கூட இல்லாமல் இருந்த நிலைமை அவதானிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அதற்குரிய தீர்வையும் மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான சகல அதற்கடுத்த நடவடிக்கைகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *