இந்த ஆழ்ந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்நாட்டை ஊடறுத்து சென்ற பின்னர் மீண்டும் ஒரு தாழமுக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 23ஆம் திகதிக்குள் வர இருக்கின்றது.
இதுவும் ஏற்கனவே உருவாகிய தாழமுக்கம் நகர்ந்த அதே வழித்தடத்தின் ஊடாகத்தான் இலங்கைக்கு அண்மையாக நகர்ந்து வர இருக்கின்றது.
அதுமட்டுமல்லாது கிறிஸ்மஸ் தினத்திற்கு பின்னரும் கூட மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாக இருக்கின்றது.
இந்த இரண்டு தாழமுக்கங்களும் தற்போதைய தாழமுக்கத்தை விட அதிக வலுவுடையதாக காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-கே.சூரியகுமாரன்
(ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி)