கொக்கட்டிச்சோலை பொலிசாரின் தேடுதல் வேட்டையில் 06 பரள் சகிப்பு சிக்கியது.

கொக்கட்டிச்சோலை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் போலீசாரினால் முற்றுகை 06 பரள்களில் கோடா, கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று (21 ) காலை சுற்றிவளைத்தனர் 

இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 06 பரள்களில் ஆயிரக்கணக்கான மில்லி லிட்டர் கோடா மற்றும் கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டதுள்ளது.

 கொக்கட்டிச்சோலை பொலிஸ் குழுவினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்

சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரள்கள் போத்தல்கள் பலன்கள் என்பனவும் பொலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன .

இதன் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் கொக்கட்டிச்சோலை சோலையில் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *