உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட விவசாயிகள் பலர் பொருளாதார,மற்றும் தொழில்நுட்பரீதியிலான நன்மையடைந்துள்ளனர்.குறித்த திட்டத்தின் பிரதிப்பணிப்பாளர் A.G.C பாபு தெரிவிப்பு.
கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் விவசாய அமைச்சின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியில் 2019ம் ஆண்டு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆறு மாகாணங்களை உள்ளடக்கி 11 மாவட்டங்களில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டைக்கல்லாறு ஆற்றுப்படுக்கையை மையப்படுத்தியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பேராறு ஆற்றை மையப்படுத்தியும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. காலநிலை பாதிப்பிலிருந்து விவசாயிகள் விரைவாக மீண்டெழுவதே இதன் நோக்கம்.
125 மில்லியன் உலக வங்கியின் அமெரிக்க டொலர் நிதி குறித்த திட்டத்திற்கு செலவாகியுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு மாவட்டங்களிலும் 3500 நிதி 83 புனரமைப்படுவதற்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 29 குளங்கள் புனரமைப்பு செய்வதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதே வேளை விவசாயிகளுக்கு தொழில்நுட்பரீதியான ஆலோசணைகளும் உபகரணங்களும் வழங்கப்பட்டு விவசாயிகள் செலவீனங்களை குறைத்து தமது உற்பத்தியில் அதிக இலாபம் ஈட்டி வருகின்றனர். விதை நடுகை கருவி, சூரியகல நீர்விநியோக கட்டமைப்பு போன்ற பல்வேறு தொழில்நுட்ப ரீதியான விடயங்களையும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி விவசாயிகளை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வைத்துள்ளதாக தெரிவித்தார்