திருடர்களை பிடிக்க, ஏன் தாமதம்..? பிரதமரின் சூடான பதில்

திருடர்களை பிடிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று திருடர்களே கேட்டாலும் இது முறையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்பதால் அரசாங்கத்திற்கு அவசரம் இல்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், “திருடனைப் பிடிக்க ஏன் தாமதம் என்று திருடர்களே எங்களிடம் கேட்கிறார்கள், கவலைப்பட வேண்டாம், நாங்கள் திருடன் காவல்துறை விளையாட்டை விளையாடவில்லை, அவர்களை போல நாடகம் நடிக்கவும் இல்லை.

நாட்டை முன்னேற்றுவதற்கே நாம் முயற்சிக்கிறோம், திருடர்களை பிடிப்பதாக ஊடகங்களுக்கு முன்னால் பொய்யாக நடிக்கவில்லை.

அவர்களை போல் திருடர்களை பிடித்து வைத்தியசாலைகளுக்கு அனுப்பி விட்டு, கையொப்பம் மாறிவிட்டது என கூறி திருடர்களை வெளியே அனுப்புவதற்காக நாங்கள் இதைச் செய்யவில்லை.

சட்டத்தின் படி சரியான தண்டனையை வழங்குவது அவசியம், இதனால் எங்களுக்கு குழப்பமோ அவசரமோ கிடையாது.

திருடர்கள் குழுவிற்கு சிறைக்கு செல்ல அவசரம் என்றால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, எங்களின் ஒப்பந்தம் மக்களுடன், தோற்கடிக்கப்பட்ட கட்சிகளுடனோ தனிப்பட்ட நபர்கள் உடனோ கிடையாது” என்றார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *