November 21, 2024
Home » News » ஈஸ்டர் தாக்குதலை விசரிக்கவும், உண்மையை வெளிக்கொணரவும் தயார்
FB_IMG_1727166673287

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை நேற்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

கொழும்பு பொரளையில் அமைந்துள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த கர்தினால் மெல்கம் ரஞ்சித், ”இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தேவையான விடயங்களை கொண்டு வருவதற்கான, முக்கிய பணியை இலங்கை மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

இலங்கையில் இது ஒரு கடினமான பணியாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எங்களின் முழு ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் உறுதியாக வழங்குகின்றோம்.

எப்போதும் ஏழை மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியைத் தொடருமாறு நான் புதிய ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தைத் தயார் செய்வதாக புதிய ஜனாதிபதி தனக்கு உறுதியளித்துள்ளார்” என கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *