இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இன்று (01) நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மற்றும் குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளர்.
இது தொடர்பான கலந்துரையாடல்களுக்காக இலங்கை குழுவொன்று வோஷிங்டனுக்கு வந்ததாகவும், மூன்றாவது மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் இதன்போது உறுதிப்படுத்தினார்.