கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த நிறுவனங்கள் உணவினை சுகாதார முறையில் தயாரிக்கின்றதா என்பது தொடர்பில் பரிசோதனை செய்யப்பட்டதுடன் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
குறித்து உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் நிறுவனங்களில் இவ்வாறு உணவு தயாரிப்பதற்கு உகந்ததில்லாத பொருட்கள் காணப்பட்டால் வழக்கு தொடரப்படும் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச் எம் றிஸ்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு பாவனைக்கு உகந்ததல்லாது காணப்பட்ட பொருட்கள் உரிய முறையில் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டது.