December 2, 2024
Home » News » பயணம் இடையே நின்றால் சரிவு நிச்சயம்
New-Project-1

எவராலும் தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடியை தன்னால் தீர்க்க முடிந்தாலும், சரியான பொருளாதார மாற்றமின்றி இந்த வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

எனவே இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சமூகவலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ‘பதிலளிக்கும் ரணிலை கேளுங்கள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 75 வருட கால ஆட்சியாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக எதனையும் செய்யவில்லை என சில தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். அது சரியல்ல என ஜனாதிபதி சுட்டிக்காட்டிய போதிலும், நாடு கடந்த 75 வருடங்களாக முன்னெடுத்துச் சென்ற சித்தாந்தங்கள் காரணமாகவே நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியவில்லை. ஜனதா விமுக்தி பெரமுன போன்ற கட்சிகள் உள்ளூர் பொருளாதாரம் பற்றி பேசுகின்றன

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிதாக சிந்தித்து கட்சி பேதமின்றி புதிய வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக ஒரு பெரும் குழு தன்னுடன் இருப்பதாகவும் அதனால் தான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *