15 வயதிற்குட்பட்ட தேசிய மட்ட காற்ப்பந்தாட்ட போட்டிக்கு கிண்ணியா வரலாற்றில் ஒரே பாடசாலையிலிருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா மத்திய கல்லூரியின் விளையாட்டு ஆசிரியர்களான என்.ஜே.முகம்மது ஆஸிக் மற்றும் எச்.எம் இபாம் ஆகியோரிடம் பயிற்சிகளை பெற்றுவரும் கிண்ணியாவச் சேர்ந்த எஸ். வலீத், என்.எம். பாத்திஹ், ஆர்.எம். முக்தி ஆகிய மாணவர்களே இவ்வாறு தேசிய அணியிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்களுள் 18 மாணவர்கள் மட்டுமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை கிண்ணியாவின் 75 வருட கால வரலாற்றில் ஒரு சாதனையாகும்.
தற்போது இவர்கள் மூவரும் 18 பேர் கொண்ட குழுவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச காற்பந்தாட்டப் போட்டிகளுக்காக இந்தியா செல்ல தயாராக உள்ளனர்.
இலங்கை தேசிய அணியின் கால் பந்தாட்ட வீரர்களாக இவர்கள் தெரிவு செய்யப்பட்டமை கிண்ணியா வரலாற்றில் முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.