கிண்ணியாவின் செஸ் சம்பியன் ஆக்கிஸ்!

கிண்ணியா அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 3இல் கற்று வருகின்ற ஆக்கிஸ் ரயான் என்ற மாணவன் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகள் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி மாகாண மட்டத்தில் வெற்றியீட்டியுள்ளார்.

அதனடிப்படையில் தேசிய மட்டப் போட்டிக்கும் தெரிவாகி இப்பாடசாலைக்கும் கிண்ணியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவருக்கும் அவரது பெற்றோருக்கும் பாடசாலை சார்பாகவும் கிண்ணியா மண் சார்பாகவும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தேசிய மட்டப் போட்டியிலும் வெற்றிவாகை சூடி இம்மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *