அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஆட்சி பீடம் ஏறுவதில் உள்ள சாதக பாதகங்களை சுருக்கமாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்
முதலில் சாதகங்களை அணுகுவோம்
- நம் நமட்டின் நீண்டநாள் சாபக்கேடாக இருந்த இலஞ்சம் ஊழல் ஒழிக்கப்படும்
- அரச இயந்திரத்தின் செயற்றிறன் அதிகரிக்கும் இதனால் மக்கள் விரைவாக சேவைகளைப் பெறலாம்
- நலன்புரி அரசு கொள்கையை மையமாகக் கொண்டு ஆட்சி புரியும்போது ஏழைகள் விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட வர்க்கத்தினருக்கான சலுகைகள் வரப்பிரசாதங்கள் அதிகரிக்கும்
- இந்நாட்டில் மிகப்பெரிய சாபக்கேடாக இருக்கும் இனவாதம் குறைந்து மதசார்பற்ற வாதம் மேலோங்கும்
- உற்பத்தி சந்தைப்படுத்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் இறக்குமதிக்கான தேவை காணப்படாது இதனால் டொலரின் விரயம் குறையும்
- தொழிலாளர்களின் நலனோம்பு திட்டங்கள் மேம்படுத்தப்படுவதால் தொழிலில் உள்ள நாட்டம் அதிகரித்து உற்பத்தி, விளைச்சலும் அதிகரிக்கும்
- சமத்துவம் சகோதரத்துவம் போன்ற கொள்கைகள் நாட்டின் தேசிய கொள்கைகளாக மாறுவதால் இனவாதம் குறைந்து போகும்
- உச்சவரம்புச் சட்டம் உள்ளிட்ட நலனோம்பு சட்டங்கள் இயற்றப்படும் போது ஏழைகளுக்கான வளப்பங்கீடு அதிகமாகும்
- வெளிநாட்டுக்கடன் பெறாத விடத்து உள்ளுர் உற்பத்தி அதிகரித்து டொலரின் பெருமதியும் அதிகரித்து பணவீக்கமும் குறையும்
- அரச வளங்கல் தேசிய மரபுரிமை ஆக்கப்படுவதால் மக்களுக்கு நாட்டுப்பற்று அதிகரித்து உள்ளூர் வளங்களை விருத்தி அடையும் திறன் ஏற்படும்
இனி பாதகங்களை நோக்குவோம்
- கடுமையான இறுக்கமான பொருளாதாரக் கொள்கைகள் அதிக வரி அறவீடு என்பன முதலாளிகளும் கம்பெனிகளும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்
- அரச உத்தியோகத்தர்கள் அதிக இறுக்கங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாகும் நிலை ஏற்படும்
- அரச உத்தியோகத்தர்களின் யூனியன்கள் சங்கங்கள் அமுக்க குழுக்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படும்
- மதத்தை பாதிக்கும் சட்டங்கள் இயற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
- அதிகபட்ச தலையீட்டுக் கொள்கை வியாபாரம் விநியோகம் என்பவற்றில் தடையை ஏற்படுத்தலாம்
- மிக முக்கியமாக வெளிநாட்டு கொள்கை பாதிப்படைப்பதற்கான வாய்ப்புண்டு குறிப்பாக சீனா, ரஷ்யா தெரிவு செய்யப்பட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா தவிர ஏனைய நாடுகளின் உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு
- ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தங்களை பொறுப்பெடுப்பதற்கும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைவதற்குமான வாய்ப்பு உள்ளதால் திட்டங்களில் பின்னடைவு ஏற்படும்
- சட்டமன்றத்தின் ஆதரவு கிடைக்காத போது ஜனாதிபதியும் சட்டத்துறையும் முட்டி மோதிக் கொள்வதால் அதிக அரசியல் கொந்தளிப்புக்கு வாய்ப்புண்டு
- இறக்குமதி தடைப்படுவதால் சில ஆடம்பர பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைப்பது கடினமாகும்
- அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மந்தமாகும் நிலை ஏற்படும்
- ஜனாதிபதியின் கட்சியிலிருந்து சிறுபான்மையினர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான வாய்ப்புக்குறையலாம் இதனால் ஜனாதிபதியிடமிருந்து தேவைகள் மற்றும் கோரிக்கைகளைப் பெறுவதில் தடைகள் காணப்படும்
பாசித் முகைதீன்
கே.ரீ.வீ அரசியல் பிரிவு