நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக இடம்பெற்ற இக்கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடல் இன்று (29) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது APC நிலையத்தில் நடைபெற்றது.
அத்துடன் இதில் கலந்து கொண்ட அனைத்து தாய்மார்களுக்கும் உடல் நிறை குறியீட்டெண் (BMI), இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் (Random blood sugar and Blood Pressure) என்பனவும் பரிசோதிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பொதுச் சுகாதார தாதிய சகோதரி, மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது , பொது சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் 35, 45 வயதுக்கு உட்பட்ட 30 க்கு மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.