மட்டக்களப்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு வலைப்பந்தாட்ட போட்டிகள்.

ikhuagsyuwdsxesdfg5tuhu

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வலைப்பந்தாட்ட போட்டியானது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் இன்றைய தினம் ( 06 )வெபர் மைதானத்தில் இடம் பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையிலான மற்றும் மாவட்ட செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இடையிலான வலைப்பந்தாட்ட போட்டிகள் இடம் பெறஉள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார். நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது. 

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் , மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் ந.தனஞ்சயன் , பிரதேச செயலாளர்கள் பதவி நிலை உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *