மாணவர்களின் பங்களிப்பில் பொலிவுற்ற தென்கிழக்கு பல்கலையின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம்!

நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முழுக்க முழுக்க மாணவர்களின் பங்களிப்புடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பகுதிகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மாணவ பேரவையின் தலைவர் ஆர். ஹனாஸ் தலைமையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய  கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்-ஷேய்க் எம்.எச்.ஏ. முனாஸ் ஆகியோர் கலந்து கொண்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பகுதிகளை திறந்து வைத்ததுடன் மாணவர்களால ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் பங்கு கொண்டனர்.

இஸ்லாமிய  கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் புனரமைக்கப்பட்ட பெயர்ப்பலகை, சுற்றுச்சூழல் அழகுபடுத்தல், கட்டிடங்களுக்கான நிறப்பூச்சு, பீடத்துக்கு என அழகிய கூட்ட மண்டபம், புனரமைக்கப்பட்ட பீடாதிபதியின் காரியாலயம், பீடத்தின் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் என்பன மாணவர்களால்  புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய மாணவ பேரவையின் தலைவர் ஆர். ஹனாஸ், குறித்த வேலைத்திட்டங்களை தாங்கள் முன்னெடுப்பதற்கு ஒத்துழைத்த அத்தனை தனிநபர்களுக்கும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் குறிப்பாக ஒத்துழைப்பு வழங்கி பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் விஷேடமாக பூரண ஒத்துழைப்பு வழங்கிய பீடாதிபதி அஷ்-ஷேய்க் எம்.எச்.ஏ. முனாஸ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். இவ்வாறான பணிகளை ஏனைய பீடங்களும் கையாண்டு தங்களது பீடங்களை அழகுபடுத்த முனைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வின்போது பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில், பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் எம்.எச்.ஹாறுன் ஆகியோருடன் நூலகர் எம்.எம். றிபாவுடீன், சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர் சப்றாஸ் நவாஸ், பேராசிரியர் எஸ்.எம்.எம். மஷாஹிர், பேராசிரியர் அஹ்மத் சர்ஜூன் ராசிக், பேராசிரியர் ஏ.எல்.எம். றியால், பேராசிரியர் ஏ.ஜௌபர் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், பதில் நிதியாளர் சி.எம்.வன்னியாராச்சி, திணைக்களங்களில் தலைவர்கள் கலாநிதி ஏ. எம். றாசிக், கலாநிதி எஸ். எம்.எம். நபீஸ், ஐடியூ ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ஏ. ரியாத் ரூலி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம்  சிரேஷ்ட, கனிஷ்ட விரிவுரையாளர்கள் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபார், வேலைப்பகுதி பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில், கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம். அஹமட் முனாஸ், மாணவ சங்கத்தின் நிர்வாகிகள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *