ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான பாலமுனை பிரதேச வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் மக்கள் சந்திப்பும் எஸ்.எம்.நபீல் (ஆசிரியர்) அவர்களின் தலைமையில் இன்று (18) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உச்சபீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.சி.சமால்தீன், மற்றும்
போட்டியிடும் வேட்பாளர்கள், பட்டியல் வேட்பாளர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், பாலமுனை பிரதேச மகளிர்கள், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.