Govpay மூலம் அபராதம் செலுத்தும் முறை குறித்து விளக்கம்.

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத சீட்டினை சாரதிகள் ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் குறித்து இன்று (11) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், இதில் உரையாற்றிய ICTAயின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க, குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான 11 பொலிஸ் நிலையங்களை இணைத்து இந்த முன்னோடி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

அதன்படி தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டத்தை எதிர்காலத்தில் நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இணையம் வழியாக அபராதம் செலுத்துவது குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஹர்ஷ புரசிங்க,

  • “Govepay வழியாக அபராதத்தை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த துண்டுப்பிரசுரத்தை நாங்கள் உருவாக்கினோம்.”
  • அபராத பத்திரத்திற்கு மேலதிகமாக அந்த துண்டுப்பிரசுரத்தையும் நாம் ஒப்படைப்போம். அதில் எவ்வாறு பணம் செலுத்துவது என்பது குறித்து படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.
  • ஒன்லைன் வங்கி வசதி அல்லது வங்கி மொபைல் செயலி மூலம் உடனடியாக இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
  • Govepay தேர்ந்தெடுக்கப்படும் போது, ​​முன்னர் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு கூடுதலாக, இலங்கை பொலிஸை தேர்ந்தெடுத்து ​​அங்கு போக்குவரத்து அபராத பகுதிக்கு சென்றால் அபராதத்தை செலுத்தும் படிவம் டிஜிட்டல் முறையில் காட்டப்படும்.
  • நீங்கள் அங்கு தேவையானவற்றை நிரப்ப வேண்டும். உங்கள் வாகன இலக்கத் தகட்டின் எண், சாரதி அனுமதிப் பத்திர எண், அபராத பத்திரத்தில் உள்ள குறிப்பு எண் மற்றும் அனைத்து குற்றங்களையும் பட்டியலிடும் ஒரு கீழ்தோன்றும் பட்டியல் உள்ளது, அதில் இருந்து உங்களுக்கு எந்தக் குற்றம் பொருந்தும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் நாங்கள் விசேட பணியைச் செய்தோம். இப்போது ஒருவருக்கு இரண்டு அபராதங்களை விதிக்க முடியும்.
  • நீங்கள் இரண்டு அல்லது மூன்று தேர்வு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படும்போது, ​​தொகை தானாகவே காட்டப்படும்.
  • ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் மொபைல் போன்களை வழங்கியுள்ளோம். அந்த எண்ணை உள்ளிட்டு பணம் ​​செலுத்தப்படல் வேண்டும்.
  • உடனடியாக ஒரு ரசீது அனுப்பப்படும். பணம் பெறப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில், Govepay என்ற குறுகிய குறியீட்டின் கீழ், பொலிஸ் அதிகாரி உடனடியாக ஒரு குறுஞ்செய்தியைப் பெறுவார்.
  • அந்த செய்தியில் எல்லா விபரங்களும் உள்ளன. பின்னர் நீங்கள் உங்க சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்றார்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *